PIB Headquarters
மனிதர்களை மையமாகக் கொண்ட, பிரதமர் திரு நரேந்திர மோடியின் செயற்கை நுண்ணறிவுக் கொள்கை - மனாவ்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 5:21PM by PIB Chennai
இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்களை இந்தியா ஒன்றிணைத்துள்ளது. பாரத் மண்டபத்தில், மனிதகுலத்தை மையமாகக் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது.
உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா, உலக அளவில் மிகப்பெரிய இளைஞர் எண்ணிக்கையையும், மிகவும் துடிப்பான தொழில்நுட்ப திறமையையும் கொண்ட நாடாக உள்ளது. இந்த தனித்துவமான நிலைப்பாடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் பிரதிபலிக்கிறது.
இன்று (2026 பிப்ரவரி 19) நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டில் தமது தொடக்க உரையின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, மனித விருப்பங்கள், நெறிமுறைகள், கண்ணியத்தின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு நுணுக்கமான அணுகுமுறையை சுட்டிக் காட்டினார். அவர் மனித குலத்தை மையமாகக் கொண்ட மானவ் (MANAV) என்ற சுருக்கத்தை வழங்கினார். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாக மானவ் (எம்.ஏ.என்.ஏ.வி) என்பதைப் பிரதமர் முன்வைத்தார். இதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.
(M.A.N.A.V. : Moral and Ethical Systems, Accountable Governance, National Sovereignty, Accessible and Inclusive AI, and Valid and Legitimate Systems)
எம் - என்பது நீதி மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கும்
ஏ - என்பது கடமைப் பொறுப்புள்ள நிர்வாகத்தைக் குறிக்கும்
என் - என்பது தேசத்தின் இறையாண்மையைக் குறிக்கும்
ஏ - என்பது எளிதில் அணுகக் கூடியதையும், அனைவரையும் உள்ளடக்கியத்தையும் குறிக்கும்
வி - என்பது சரிபார்க்கக் கூடியது மற்றும் சட்டப்பூர்வமானது என்பதைக் குறிக்கும்
இந்தியாவின் மானவ் தொலைநோக்குப் பார்வை என்பது பிரதமரால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கருத்தியல் கட்டமைப்பு மட்டுமல்ல, அது ஒருங்கிணைந்த திட்டங்கள், கொள்கை முயற்சிகள் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான தேசிய உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கைகள் கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிர்வாகம், புதுமைச் சூழல் அமைப்புகள் அனைத்திலும் வழிகாட்டும் கொள்கைகளை இது வழங்குகிறது.
மானவ் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு சுருக்கமான ஆனால் தெளிவான கண்ணோட்டத்தை உலகிற்கு அவர் வழங்கியுள்ளார். புதுமைகளை நெறிமுறைகளுடனும் பொறுப்புணர்வுடனும் இணைத்து இந்தியா அவற்றை வடிவமைத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230282®=3&lang=1
(Release ID: 2230282)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230438)
வருகையாளர் எண்ணிக்கை : 10