உள்துறை அமைச்சகம்
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 11:12AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சத்ரபதி சிவாஜி மகாராஜா இளம் வயதிலேயே படையெடுப்புகளில் இருந்து விடுபட்ட சுதந்திர தேசத்தை நிறுவுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தமது வாழ்நாள் முழுவதும் தர்மக் கொடியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தர்மம், சுயராஜ்யம் நிலவ சிவாஜி மகாராஜா விருப்பத்தைக் கொண்டிருந்தார். சிவாஜி மகாராஜா, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஒழுங்கமைத்து, தேசத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதையே தமது நோக்கமாகக் கொண்டு, ஒரு பரந்த ராணுவத்தை கட்டியெழுப்பினார். அவரது வலுவான விருப்பம், அசைக்க முடியாத துணிச்சல், சிறந்த உத்தி ஆகியவை மிகச் சிறப்பானவையாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளன."
***
(Release ID: 2230076)
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230135)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam