பிரதமர் அலுவலகம்
வளமான இந்தியாவுக்கான விரிவான சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 9:50PM by PIB Chennai
அரசின் விரிவான முதலீட்டு உந்துதல், தேவையால் வழிநடத்தப்படும் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தங்கள் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்கட்டமைப்பு, பொருள் உற்பத்தி, பொது நன்மைக்கான டிஜிட்டல் மையம், வணிகம் செய்வதை எளிதாக்கும் கட்டமைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்தரும் முன்முயற்சிகள் மூலம், வளமான இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வை நனவாகி இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார அடித்தங்களை வலுப்படுத்தவும், உலகளாவிய முதலீட்டை ஈர்க்கவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அனைத்து குடிமக்களுக்கும் உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“இந்தியாவின் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தங்கள் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விரிவான முதலீட்டு உந்துதல், தேவையால் வழிநடத்தப்படும் கொள்கைகளால் இது ஊக்கம் பெற்றுள்ளது.
உள்கட்டமைப்பு, பொருள் உற்பத்தி, பொது நன்மைக்கான டிஜிட்டல் மையம், வணிகம் செய்வதை எளிதாக்கும் கட்டமைப்பு என எதுவாக இருந்தாலும், வளமான இந்தியா என்ற நமது கனவை நனவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
***
(Release ID: 2212264)
AD/SM/LDN/KR
(रिलीज़ आईडी: 2229444)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam