பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபரின் இந்திய வருகை: முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் முடிவுகளின் தொகுப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 7:00PM by PIB Chennai
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:
அரசியல் மற்றும் உத்தேசக் கூட்டு ஒத்துழைப்பு
இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவு, "சிறப்பு உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பு" என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மை மற்றும் 'ஹொரைசன் 2047' (Horizon 2047) திட்டத்தைச் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய, ஆண்டுதோறும் வெளிநாட்டு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
இந்தியா - பிரான்ஸ் இடையில் 'புத்தாக்க ஆண்டு' மற்றும் 'புத்தாக்க வலை பின்னல்' (Innovation Network) ஆகியவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் ராணுவம்
கர்நாடக மாநிலம் வேமகலில், H125 ஹெலிகாப்டர் கடைசி கட்ட பாகங்கள் சேர்ப்புமையம் திறந்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தியா - பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 'ஹேமர்' (HAMMER) ஏவுகணைகளை உற்பத்தி செய்ய பெல் மற்றும் சஃப்ரான் (Safran) நிறுவனங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இரு நாட்டு ராணுவ நிலைகளிலும் பரஸ்பரம் அதிகாரிகளைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 'கூட்டு மேம்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தாதுக்கள் மற்றும் உலோகங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான கூட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேம்பட்ட பொருட்கள் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்க இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிரான்ஸின் CNRS இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதாரம், புத்தொழில் மற்றும் சுகாதாரம்
இரு நாடுகளுக்கும் இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்டார்ட்அப் சூழல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக தெலுங்கானாவின் 'டி-ஹப்' மற்றும் பிரான்ஸின் 'நோர்ட் பிரான்ஸ்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத்திற்கான செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்கள், உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மற்றும் வளர்சிதை மாற்ற சுகாதார அறிவியல் (Metabolic Health Sciences) தொடர்பான ஆராய்ச்சி மையங்கள் அமைக்க உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு
விமானப் போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டிற்கான தேசிய சிறப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய எரிசக்தி அமைச்சகம் மற்றும் பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் இடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை மற்றும் பிரான்ஸின் 'லா போஸ்ட்' இடையே ஒத்துழைப்புக்கான கடிதம் பரிமாறப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229255®=3&lang=1
வெளியிட்டு அடையாள எண் : 2229255)
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229387)
வருகையாளர் எண்ணிக்கை : 7