தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 12:44PM by PIB Chennai

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியா முக்கிய இடம் பெற முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்  இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாட்டில்  சிறப்பு அரங்கை  அமைத்துள்ளது.

இந்த அரங்கு  மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள், புத்தொழில் வளர்ச்சி மற்றும் பொறுப்புடன் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை முன்னெடுக்கும் அரசின் நோக்கம் வெளிப்படுத்தப்படுகிறது.

அரங்கில்  இடம்பெற்றுள்ள வேவ்ஸ் படைப்பாளர்  பகுதியில், கொள்கை நிர்ணயிப்போர், புத்தொழில்  நிறுவர்கள், படைப்பாளர்கள் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவை இந்தியாவின் வளர்ச்சி தேவைகளுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடினர்.

அதிகாரிகள் கூறுகையில், உலக தொழில்நுட்பத்தை வெறும் பயன்படுத்தும் நாடாக அல்லாமல், தன்னிச்சையான மற்றும் சமூகப் பயன்பாடு கொண்ட ஏஐ தீர்வுகளை உருவாக்கும் நாடாக இந்தியாவை காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றனர்.

சுகாதாரம், ஊடகம், ஆட்சி மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் செயல்படும் இந்திய புத்தொழில் நிறுவனங்கள் இந்த அரவங்கில்  தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. கலந்துரையாடல்கள் மற்றும் சிறப்பு அமர்வுகள் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அனைத்து நிகழ்ச்சிகளும் பிரசார் பாரதி நிறுவனத்தின் டிஜிட்டல் தளமான வேவ்ஸ் ஓடிடி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

அரசு அரங்கில் புத்தொழில்  ஊடக தளம் இணைந்திருப்பது, இந்தியா தனது புதுமை முயற்சிகளை உலகிற்கு வெளிப்படுத்தும் புதிய அணுகுமுறையை காட்டுகிறது என்று தொழில் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

புத்தொழில் முனைவோர், படைப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே மேடையில் சந்தித்த இந்த அரங்குஇந்தியாவின் ஏஐ நோக்கத்தை செயல்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

 

***

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2228748) வருகையாளர் எண்ணிக்கை : 11