தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 4:23PM by PIB Chennai

திரைப்படச் சட்டம் 1952 மற்றும் திரைப்பட சான்றிதழ் விதிமுறைகள் 2024-ன்படி மத்திய திரைப்படத் தணிக்கைவாரியம் செயல்படுகிறது. இந்த விதிமுறைகளின்  பிரிவு 37-ன்படி திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆன்லைன் சான்றிதழ் முறை அமலாக்கத்திற்கு பின்னர் தற்போதைய சராசரி கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி  திரைப்படங்களுக்கு  18 நாட்களுக்குள்ளும் குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள்ளும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

திரைப்படங்களை மறு ஆய்வுக் குழுக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் இந்தச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2223140)

TV/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223449) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu , Kannada , Malayalam