வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தி மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தொழில்துறை திறன்களுக்கான பிரிக்ஸ் மையத்தில் இந்தியா இணைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 11:55AM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை  புதுதில்லி வனிஜியா பவனில் ஏற்பாடு செய்திருந்த தொழில்துறை திறன்களுக்கான பிரிக்ஸ் மையத்தில் (பிசிசிஐ) இந்தியா இணைந்தது. தொழில்துறை 4.0 திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் பிரிக்ஸ் நாடுகளின் உற்பத்தி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ஒருங்கிணைந்த ஆதரவை அளிக்கும் ஒரே மையமாக சேவையாற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து இந்த பிசிசிஐ அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை – ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு இடையே நம்பிக்கை நிதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையின் பொருளாதார ஆலோசகர் திரு அக்ரிம் கௌஷல், ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் கிரிஸ்டியானோ பசினி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222956&reg=3&lang=1

***

TV/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2223058) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada , Malayalam