இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘மை பாரத் பட்ஜெட் குவெஸ்ட் 2026’ விநாடி வினா போட்டியை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2026 2:38PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று ‘மை பாரத் பட்ஜெட் குவெஸ்ட் 2026’ என்ற நாடு தழுவிய இளைஞர்களை மையமாகக் கொண்ட புதிய முயற்சியை தொடங்கி வைத்தார். இளைஞர்களிடையே மத்திய பட்ஜெட் குறித்த புரிதலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்த இளைஞர்களை இந்த முன்னெடுப்பு ஒருங்கிணைக்கிறது.  இதன் மூலம், 2026 மத்திய பட்ஜெட்டை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைக்க இது முயல்கிறது.

இந்த போட்டி நாளை (பிப்ரவரி 3, 2026) முதல் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/) தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இது 2026 மத்திய பட்ஜெட் குறித்த ஒரு தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியாகும். மை பாரத் இணையதளத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 17 ஆகும். இதற்குப் பிறகு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை நடைபெறும் இரண்டாவது சுற்றில் பங்கேற்பார்கள். இது ஒரு கட்டுரை எழுதும் சுற்றாகும். கட்டுரைச் சுற்றில், இளைஞர்களுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்புடைய மத்திய பட்ஜெட் தொடர்பான 8 தலைப்புகள் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் கட்டுரைகள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள்.

கட்டுரைகளின் மதிப்பீடு மார்ச் 3 மற்றும் மார்ச் 10, 2026 ஆகிய தேதிகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும். மேலும் மாநிலம்/யூனியன் பிரதேச வாரியான தகுதிப் பட்டியல்கள் மார்ச் 10 அன்று அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச வெற்றியாளர்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

***

(Release ID: 2222083)

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2222387) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam