நிதி அமைச்சகம்
2026-27-ம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டில், அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கானநேரடி வரித் திட்டங்கள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
01 FEB 2026 12:54PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நோக்கில் பல நேரடி வரித் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
வழக்கு நடவடிக்கைகளின் பன்முகத்தன்மையைத் தவிர்ப்பதற்காக, மதிப்பீடு மற்றும் அபராத நடவடிக்கைகளுக்கு ஒரு பொதுவான உத்தரவின் மூலம் ஒருங்கிணைக்க இந்தப் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. முன்கூட்டியே செலுத்த வேண்டிய தொகையின் அளவு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, அது முக்கிய வரித் தேவையின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.
வழக்குகளைக் குறைப்பதற்கான ஒரு கூடுதல் நடவடிக்கையாக, மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகும், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்குகளைப் புதுப்பிக்க அனுமதிக்கும் இதை நிதி அமைச்சர் முன்மொழிந்தார். இதற்கு, சம்பந்தப்பட்ட ஆண்டிற்குப் பொருந்தக்கூடிய வரி விகிதத்திற்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். பின்னர், மதிப்பீட்டு அதிகாரி புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை மட்டுமே மதிப்பீடு செய்வார்.
குறைந்த வருமானத்தைக் காட்டும் குற்றங்களில் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிப்பதற்கான ஒரு நடைமுறை ஏற்கனவே உள்ளது. இந்த விலக்கு அளிக்கும் முறையாவ் தவறான தகவல்களை அளிக்கும் குற்றங்களுக்கும் பயன்படுத்த நிதி அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், அத்தகைய வழக்கில், வரி செலுத்துவோர் செலுத்த வேண்டிய வரி மற்றும் வட்டிக்கு மேலாக, வரித் தொகையில் 100 சதவீதத்தை கூடுதல் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.
20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையா வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த தகவலை வெளியிடாததற்கு தற்போது எந்த அபராதமும் விதிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு 1.10.2024 முதல் முன்தேதியிட்டு வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
***
VJ/PKV/TV/SH
(रिलीज़ आईडी: 2221867)
आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam