நிதி அமைச்சகம்
உயிரிமருந்துத் துறையில் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற 'பயோஃபார்மா சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 1:03PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2026) நாடாளுமன்றத்தில் 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து (பயோஃபார்மா) உற்பத்தி மையமாக மேம்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி ரூபாய் செலவில் பயோஃபார்மா சக்தி என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உயிரி மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். இதுதவிர சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகளைக் காணலாம்:
- துணை சுகாதார வல்லுநர்களுக்கான நிறுவனங்கள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய துணை சுகாதார நிலையம் நிறுவப்படும். இது கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்து, அறுவை சிகிச்சை மையங்களில் நவீன தொழில்நுட்பம், உளவியல் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100,000 துணை சுகாதார வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள்.
- முதியோர் பராமரிப்பு சேவைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான சூழல் அமைப்பு உருவாக்கப்படும். முக்கியப் பராமரிப்பு முறைகள், நல்வாழ்வு, யோகா, மருத்துவ உதவி சாதனங்களை இயக்குதல் போன்ற திறன்களை ஒருங்கிணைத்து, இது தொடர்பாக வரும் ஆண்டில், 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
- இந்தியாவை மருத்துவ சுற்றுலா சேவைகளுக்கான மையமாக மேம்படுத்துவதற்காக, தனியார் துறையுடன் இணைந்து ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை நிறுவ மாநிலங்களுக்கு ஆதரவளிக்கப்படும். இந்த மையங்கள் மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி வசதிகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாகச் செயல்படும்.
- 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும்
- உயர் தரச் சான்றிதழ்களுக்காக ஆயுஷ் மருந்தகங்கள் தொடர்பான பரிசோதனை ஆய்வகங்கள் மேம்படுத்தப்பட்டு அதிக பணியாளர்கள் இணைக்கப்படுவார்கள்
- ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும்.
- ராஞ்சியிலும் தேஜ்பூரிலும் உள்ள தேசிய மனநல நிறுவனங்கள் பிராந்திய உச்ச நிறுவனங்களாக மேம்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221443®=3&lang=1
***
VJ/PKV/PLM/RK/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221834)
வருகையாளர் எண்ணிக்கை : 79
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
Malayalam
,
Gujarati
,
Bengali
,
Bengali-TR
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada