நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

31.01.2026 வரை தேசிய கூட்டுறவு கூட்டமைப்புகள் முதலீடுகள் மூலம் பெறும் ஈவுத்தொகைக்கு 3 ஆண்டுகள் வரி விலக்கு

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 12:49PM by PIB Chennai

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முதன்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பல்வேறு சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், முதன்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனம் மற்றும் பருத்தி விதைகளை வழங்குவதற்கு கூட்டுறவு சங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட விலக்கு  நீட்டிக்கப்படும் என கூறினார். தற்போது, ​​அதன் உறுப்பினர்களால் விநியோகிக்கப்படும் பால், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் அல்லது காய்கறிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள முதன்மை கூட்டுறவு சங்கத்திற்கு விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

புதிய வரி முறையின்கீழ், கூட்டுறவு சங்கங்களுக்கு இடையே கிடைக்கும் ஈவுத்தொகை, அதன் உறுப்பினர்களுக்கு மீண்டும் விநியோகிக்கப்படும் பட்சத்தில், அந்த அளவிற்கு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

தேசிய கூட்டுறவு கூட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் கூடுதல் நடவடிக்கையாக, அறிவிக்கப்பட்ட தேசிய கூட்டுறவு கூட்டமைப்புகள் 31.01.2026 வரை நிறுவனங்களில் செய்த முதலீடுகள் மூலம் பெறும் ஈவுத்தொகைக்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்மொழிந்துள்ளார். இந்த வரி விலக்கு, அந்த ஈவுத்தொகையானது அதன் உறுப்பினர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் விநியோகிக்கப்பட்டால் மட்டுமே பொருந்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221407&reg=3&lang=1

***

PKV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221820) வருகையாளர் எண்ணிக்கை : 75