நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருகிறது: பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:50PM by PIB Chennai

பள்ளிக் கல்வி, உயர்கல்வி என இரண்டிலும் நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்விக்கும் திறன் தேவைகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (29.01.2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சாதனைகள், கல்வியறிவு விகிதத்தில் அதிகரிப்பு, பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, தொழிற்கல்வி விகிதம் உயர்வு போன்றவை பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம், 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை ஆகியவை, தரமான கல்வியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்தியா உலகின் மிகப்பெரிய பள்ளி அமைப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. 14.71 லட்சம் பள்ளிகளில் 24.69 கோடி மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 1.01 கோடிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 13,076 பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் அமைக்கப்படுகிறது

2014-15-ம் ஆண்டில் 51,534 ஆக இருந்த உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை ஜூன் 2025 நிலவரப்படி 70,018 ஆக அதிகரித்துள்ளது. 2014-15 - 2024-25-ம் ஆண்டுகளுக்கு இடையில் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக விரிவடைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வி முறை பல சீர்திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

**

 

(Release ID: 2219936)

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2220693) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam