நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின்  வருவாயை இரட்டிப்பாக்குவதே நோக்கமாகக் கொண்டு கொள்கை வகுப்பு, உற்பத்தி மேம்பாடு, நிறுவனமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:02PM by PIB Chennai

விவசாயிகளின்  வருவாயை இரட்டிப்பாக்குவதே நோக்கமாகக் கொண்டு கொள்கை வகுப்பு, உற்பத்தி மேம்பாடு, நிறுவனமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தி 2023-24-ம் ஆண்டில் 121.75 லட்சம் டன்னாக இருந்தது என்று இதன் மூலம் 2015-16-ம் ஆண்டில் 62.3 சதவீதமாக இருந்த சமையல் எண்ணெயின் இறக்குமதி 2023-24-ம் ஆண்டில்  56.25 சதவீதமாக குறைந்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரதமரின் ஜனதான்ய விவசாயிகள் திட்டத்தின் கீழ், 100 வேளாண் மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர்க் காப்புத் திட்டத்தின் கீழ், 4.19 கோடி விவசாயிகளுக்கு காப்பீடு வசதிகள் கிடைத்துள்ளதுடன் 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219956&reg=3&lang=1

**

TV/SV/KPG/EA


(रिलीज़ आईडी: 2220448) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Odia , Telugu , Kannada , Malayalam