நிதி அமைச்சகம்
உலக அளவில் புவிசார்அரசியலில் நிச்சயமற்ற சூழல் இருந்த போதிலும் இந்தியாவில் நிதித்துறைச் செயல்பாடகள் வலுவாக இருந்தது – பொருளாதார ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:12PM by PIB Chennai
உலக அளவில் புவிசார்அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவி வந்த போதிலும் இந்தியாவில் நிதித்துறை வலுவானதாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வலுவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள், நிதித்துறையின் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளித்ததாக இருந்து என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
புதுமை கண்டுபிடிப்புளில் ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகள் நிச்சயமற்ற பொருளாதார சூழல் போன்ற சவாலான காலங்களிலும் நிலைத்தன்மையுடன் இருக்க உதவியதாக அந்த அறிக்கை கூறுகிறது. உள்நாட்டு நிதிசார் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான செயல்பாடுகள், சர்வதேச அளவில், நிதித்துறையில் ஏற்படும் தாக்கத்திற்கு எதிராக வலுவாக செயல்பட உதவியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதிசார் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள், நிதித்துறையின் செம்மையான செயல்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219997®=3&lang=1
**
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220379)
आगंतुक पटल : 8