பிரதமர் அலுவலகம்
பாசறை திரும்புதல் நிகழ்ச்சி இந்தியாவின் வலுவான ராணுவ பாரம்பரியத்தின் பலத்தை வெளிப்படுத்துகிறது : பிரதமர்
வெற்றியில் உள்ள ஞானத்தையும், மதிப்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 9:51AM by PIB Chennai
பாசறை திரும்புதல் நிகழ்ச்சி குடியரசு தினக் கொண்டாட்டங்களின் நிறைவை அடையாளப்படுத்துவதாகவும், இந்தியாவின் வலுவான ராணுவ பாரம்பரியத்தின் பலத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நமது ராணுவம் குறித்து நாம் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
வெற்றியை நோக்கி நடைபோடும் வீரராக அதன் ஞானத்தையும், மதிப்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
"एको बहूनामसि मन्य ईडिता विशं विशं युद्धाय सं शिशाधि।
अकृत्तरुक्त्वया युजा वयं द्युमन्तं घोषं विजयाय कृण्मसि॥"
துணிச்சல் மிக்க வீரரே! உமது சீற்றம் ஞானத்தால் வழி நடத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கானவர்கள் இடையே நீங்கள் ஒரு நாயகனாக இருக்கிறீர்கள். நிர்வாகம் செய்ய உங்கள் மக்களுக்கு கற்பியுங்கள். கௌரவத்துடன் போரிடுங்கள். வெற்றியை நோக்கி நாம் நடைபோடும் நிலையில், உங்களுக்கு உறுதுணையாக இருந்து நாங்கள் வாழ்த்த விரும்புகிறோம் என்று அந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“आज शाम बीटिंग रिट्रीट का आयोजन होगा। यह गणतंत्र दिवस समारोहों के समापन का प्रतीक है। इसमें भारत की समृद्ध सैन्य विरासत की शक्ति दिखाई देगी। देश की रक्षा में समर्पित अपने सशस्त्र बलों पर हमें अत्यंत गर्व है।
एको बहूनामसि मन्य ईडिता विशं विशं युद्धाय सं शिशाधि।
अकृत्तरुक्त्वया युजा वयं द्युमन्तं घोषं विजयाय कृण्मसि॥"
***
(Release ID: 2219879)
TV/SMB/RJ/EA
(रिलीज़ आईडी: 2220095)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam