பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் துணைத் தலைவரின் இந்தியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 2:53PM by PIB Chennai

1. வரும் 2030 - ம் ஆண்டிற்குள், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து மேற்கொள்ளப்படவேண்டிய விரிவான உத்திசார் நடவடிக்கைகள் குறித்த முதன்மை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் நிதித்துறை சார்ந்த நடவடிக்கைகள்:

2. இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது குறித்த கூட்டு அறிவிப்பு

3. முதலீடுகள் மற்றும் நிதிசார் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ரிசர்வ் வங்கி - ஐரோப்பிய பங்கு பரிவர்த்தனை ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. மேம்பட்ட டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகள் குறித்த நிர்வாக ஏற்பாடுகள்

பாதுகாப்புத் துறை சார்ந்த நடவடிக்கைகள்:

5. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு

6. இந்திய - ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே, தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல்

திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் பரிமாற்றம் சார்ந்த நடவடிக்கைகள்:

7. தொழிலார்களின் பரிமாற்றம் குறித்த ஒத்துழைப்பிற்கான விரிவான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

8. திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில், ஐரோப்பிய யூனியனின் சட்டபூர்வ நடைமுறைகளுக்கான அலுவலகத்தை சோதனை அடிப்படையில் அமைப்பது குறித்த அறிவிப்பு

பேரிடர் மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகள்:

9. பேரிடர் அபாய மேலாண்மை மற்றும் அவசரகால மீட்புப் பணிகளில் ஒத்துழைப்பது தொடர்பான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் - ஐரோப்பிய குடிமைப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரககும் இடையேயான நிர்வாக ஏற்பாடு

தூய்மை எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகள்:

10. பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான பணிக்குழுவை அமைத்தல்

அறிவியியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நடவடிக்கைகள்:

11. 2025-2030 காலகட்டத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை புதுப்பித்தல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் சார்ந்த நடவடிக்கைகள்:

12. ஐரோப்பிய நாடுகளுடன் நீண்டகாலத் திட்டங்களுக்கான கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைவது குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல்

தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்:

13. மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் திறன் மையம், வேளாண் மற்றும் உணவு சார்ந்த அமைப்புகளில் பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சூரியசக்தி அடிப்படையிலான தீர்வுகள், பருவநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அமைப்புகள், மற்றும் ஆப்பிரிக்கா, இந்தோ-பசிபிக் மற்றும் கரீபியன் கடற்பகுதிகளில் உள்ள சிறு தீவுகளைக் கொண்ட வளரும் நாடுகளில் சூரியசக்தி அடிப்படையிலான நீடித்த எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு திட்டங்களை இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பின் கீழ் இணைந்து செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219113&reg=3&lang=1

**

(Release ID:2219113)

TV/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2219228) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Gujarati , Kannada , Malayalam