தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் ஆணையம் 16-வது தேசிய வாக்காளர் தினத்தை நாளை கொண்டாடுகிறது - குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 24 JAN 2026 3:00PM by PIB Chennai

தேர்தல் ஆணையம் (ECI) நாளை (25.01.2026) புதுதில்லியில் 16-வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் "எனது இந்தியா, எனது வாக்கு", "இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் மக்கள்" எனபதாகும்.

புதுதில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

 குடியரசுத் தலைவர் நிகழ்வில் உரையாற்றுவதுடன், புதிதாகப் பதிவுசெய்த இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குகிறார். தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சிறந்த தேர்தல் மேலாண்மை நடைமுறைகள், வாக்காளர் விழிப்புணர்வு, மாதிரி நடத்தை விதிகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளையும், ஊடகங்களுக்கான சிறப்பு விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்குகிறார். தேர்தல்களின் பல்வேறு அம்சங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு பிரத்யேக கண்காட்சியும் நடைபெறுகிறது. வாக்காளர்களின் நலனுக்காக தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டும்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மாநில, மாவட்ட நிலையிலும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அந்தந்த வாக்குச் சாவடி இடங்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, புதிதாகப் பதிவுசெய்த வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்கள்.

***

(Release ID: 2218104)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2218222) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu , Kannada , Malayalam