பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பராக்கிரம தினத்தையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 23 JAN 2026 8:18AM by PIB Chennai

பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் அசைக்க முடியாத துணிவு, ஊசலாட்டம் இல்லாத உறுதி, நாட்டுக்கு ஒப்பற்ற பங்களிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள அவர், நேதாஜியின் அச்சமற்ற தலைமைத்துவமும், ஆழமான தேசப்பக்தியும், வலுவான இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ச்சியான சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக்கு எப்போதும் பெரிதும் ஈர்ப்புடையவராக இருந்துள்ளார். 2009 ஜனவரி 23 அன்று குஜராத்தின் தகவல் தொழில்நுட்ப தளத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இ-கிராம் விஸ்வகிராம் திட்டத்தை ஹரிபுராவில் தொடங்கினேன். நேதாஜி போஸ் பயணம் செய்த அதே ஹரிபுரா சாலையில் எனக்கு அப்போது வரவேற்பு அளிக்கப்பட்டது.

2012-ல் இந்திய விடுதலை ராணுவ தினத்தை குறிக்கும் வகையில், அகமதாபாதில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியால் ஊக்கம் பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் திரு பி ஏ சங்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2018 இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றது. அந்த ஆண்டு சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டினைக் குறிக்கும் நிகழ்வு செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் மூவண்ணக் கொடியை ஏற்றும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். அதேபோல் இந்திய தேசிய ராணுவத்தின் மூத்த வீரர் லால்தி ராம் அவர்களுடன் கலந்துரையாடியதும் பசுமையான நினைவாக உள்ளது.

அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் (ஏற்கனவே இது போர்ட் பிளேர் என்று அழைக்கப்பட்டது) சுபாஷ் பாபு மூவண்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டினைக் குறிக்கும் வகையில், மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ரோஸ் தீவு என்பது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் நேதாஜி அணிந்த தொப்பி உட்பட நேதாஜி போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

நேதாஜி போஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினம் பராக்கிரம தினம் என அறிவிக்கப்பட்டது. நேதாஜியின் மாபெரும் தப்பித்தல் தொடங்கிய கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனை 2021-ல் நான் பார்வையிட்டேன்.

காலனிய மனோபாவத்தை கைவிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பெருமை சேர்க்கும் முயற்சிகளின் ஒளிரும் உதாரணமாக தேசிய தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்தியா கேட் அருகே அவருக்கு மாபெரும் சிலை வைக்கும் எங்கள் முடிவு பார்க்கப்படுகிறது. இந்த உருவச்சிலை வரவிருக்கும் தலைமுறைகளுக்கு உந்துசக்தியாக விளங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217524&reg=3&lang=1

***

AD/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2217668) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada