மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்ற அவைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதில் ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களிடம் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள்

प्रविष्टि तिथि: 21 JAN 2026 6:45PM by PIB Chennai

ஜனவரி 19 முதல் 21, 2026 வரை லக்னோவின் உத்தரப் பிரதேச விதான் பவனில் நடைபெற்ற 86வது அகில இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா  நிறைவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்றங்களை மிகவும் பயனுள்ளதாகவும், மக்கள் சார்ந்ததாகவும், பொறுப்புணர்வுடனும் மாற்றுவதற்காக, ஒரு 'தேசிய சட்டமன்ற குறியீடு' தயாரிக்கப்படும் என்றும், இது சட்டமன்றங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை எளிதாக்குவதுடன், நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களுக்கிடையே கலந்துரையாடலின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் கூறினார். இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அவர், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவையில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும்,இதனால்  குடிமக்களுக்கு  ​​மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

அவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதில் ஒத்துழைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217013&reg=3&lang=1        

---

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2217109) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada