குடியரசுத் தலைவர் செயலகம்
ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் திரு ஜோஸ் மானுவல் அல்பேர்ஸ், குடியரசுத்தலைவரைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 3:56PM by PIB Chennai
ஸ்பெயின் நாட்டின் வெளியுறவு, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஒத்துழைப்புத்துறை அமைச்சர் திரு ஜோஸ் மானுவல் அல்பேர்ஸ் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (21.01.2026) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார். திரு அல்பேர்ஸை வரவேற்ற குடியரசுத்தலைவர், இந்தியா – ஸ்பெயின் இடையேயான உறவுகள் நூற்றாண்டுகால பழமையானவை என்றும் வர்த்தகம், கலாச்சாரம், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பகிரப்பட்ட அம்சங்களால் அவை செழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடப்பாண்டு இருநாடுகளின் தூதரக உறவுகளின் 70 ஆண்டு நிறைவைக் குறிப்பதாகக் கூறினார். இந்தியா – ஸ்பெயின் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவடைந்து வருவதுடன் பொருளாதார உறவு சீராக வளர்ச்சியடைந்து வருவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
பொறியியல், ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புறச் சேவைகள், விமானப்படை ஆகியவற்றில் ஸ்பெயினின் வலிமை இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு பொருத்தமாக உள்ளது என்று கூறினார். இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு மேலும் வலுவடையக் கூடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216886®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2217019)
आगंतुक पटल : 19