உள்துறை அமைச்சகம்
மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
प्रविष्टि तिथि:
21 JAN 2026 12:53PM by PIB Chennai
மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா, பதிவிட்டிருப்பதாவது:
“மணிப்பூர் மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநிலத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். வளமையான கலாச்சாரம் மற்றும் திறமைமிக்க மக்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் என்றும் நமது பெருமையாகும். வரும் காலங்களில் இம்மாநிலம் புதிய உச்சத்தை அடையட்டும்”.
“மேகாலயா மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். செழுமைமிக்க உயிரிப் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகள், கலாச்சாரம், சடங்குகளில் சங்கமத்துடன் கூடிய மேகாலயா இந்தியாவின் உத்வேகத்திற்கு மேலும் பெரும் வலிமை சேர்க்கிறது. இம்மாநிலம் வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அடையட்டும்”.
“திரிபுரா மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநிலத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்துள்ள திரிபுரா, தற்போது இந்திய வளர்ச்சியில் பெருமைமிக்க பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது. மோடி அவர்களின் தலைமையின் கீழ், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முதலமைச்சர் டாக்டர் மானிக் சகா, தொடர்ந்து முன்னோக்கிச் செல்லட்டும்”.
***
(Release ID 2216764)
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2216930)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam