குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும்

प्रविष्टि तिथि: 21 JAN 2026 11:02AM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பொது மக்களின் பார்வைக்காக 2026 பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை திறக்கப்படும்.   பொதுமக்கள் இத்தோட்டத்தை வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.  பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கட்கிழமையும், ஹோலிப்பண்டிகை காரணமாக மார்ச் 4 அன்றும் அமிர்த தோட்டம் மூடப்பட்டிருக்கும்.

இத்தோட்டத்தை கட்டணமின்றி பார்வையிடலாம். https://visit.rashtrapatibhavan.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருகை தருவோர் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ள பதிவிடத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்காக மத்திய செயலகம் மெட்ரோ நிலையத்திலிருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது. இது காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216693&reg=3&lang=1

***

(Release ID: 2216693)

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2216777) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Malayalam