பிரதமர் அலுவலகம்
மேகாலயா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 9:21AM by PIB Chennai
மேகாலயா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு மேகாலயா மாநில மக்கள் வலுவான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர் என்று பிரதமர் கூறியுள்ளார். அம்மாநிலத்தின் கலாச்சார வளமையும், இயற்கையின் அழகும், நாடு முழுவதிலும் உள்ள மக்களால் பரவலாகப் பாராட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், மேகாலயா மாநிலம் வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மேகாலயா மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகாலயா மாநில மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். அந்த மாநிலத்தின் கலாச்சார வளமையும், இயற்கையின் அழகும் பரவலாகப் பாராட்டப்படுகின்றன. எதிர்காலத்தில், மேகாலயா மாநிலம் வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சங்களை அடையட்டும்.”
***
(Release ID:2216657)
AD/SV/PD
(रिलीज़ आईडी: 2216755)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam