உள்துறை அமைச்சகம்
மகர சங்கராந்தி, போகி, உத்தராயண், மாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
இந்த பண்டிகைகள் அனைவரின் வாழ்க்கையிலும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் - திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
14 JAN 2026 3:10PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (14.01.2025) நாட்டு மக்களுக்கு புனிதமான மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கர்நாடக மக்களுக்கு மகர சங்கராந்தி, ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு போகி, குஜராத் மக்களுக்கு உத்தராயண், அசாம் மக்களுக்கு மாக் பிஹு ஆகிய பண்டிகைகளையொட்டி வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் ஆற்றல், உற்சாகத்தை வழங்கும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உள்ளம் கனிந்த வாழ்த்துகள். இந்த பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்"
" கர்நாடகாவின் நமது சகோதர, சகோதரிகளுக்கு மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உற்சாகத்தைத் தூண்டி, நமது பிணைப்புகளை வலுப்படுத்தட்டும். அனைவரின் நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் பிரார்த்திக்கிறேன்”
“நமது தெலுங்கு சகோதர சகோதரிகளுக்கு மகர சங்கராந்தி வாழ்த்துகள். போகி, சங்கராந்தி, கனுமா பண்டிகைகள் ஒவ்வொரு வீட்டிலும் செழிப்பு, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் ஆசீர்வாதங்களைப் பொழியட்டும்”
"உத்தராயண் புனித தருணத்தில் எனது வாழ்த்துகள். அனைவரின் நல்வாழ்விற்காக பகவான் சூரிய நாராயணனைப் பிரார்த்திக்கிறேன்."
"அசாமில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மாக் பிஹு நல்வாழ்த்துகள். இந்த அறுவடைத் திருநாள் நமது ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவருக்கும் செழிப்பு, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியை வழங்கட்டும்"
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2214687)
आगंतुक पटल : 7