பிரதமர் அலுவலகம்
மகர சங்கராந்திப் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
மகர சங்கராந்தியின் புனித்ததை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JAN 2026 10:24AM by PIB Chennai
மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்று (14.01.2026) தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகர சங்கராந்தி என்பது இந்திய கலாச்சார மரபுகளின் செழுமையை பிரதிபலிக்கும் ஒரு பண்டிகை என்றும், இது நல்லிணக்கம், செழிப்பு, ஒற்றுமை ஆகிய உணர்வுகளைக் குறிக்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதன் இனிமை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும் என்றும், நாட்டின் நலனுக்காக சூரிய பகவான் ஆசிகளை வழங்குவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மங்களகரமான சங்கராந்தி பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி கொண்டாடப்படுகிறது என அவர் கூறியுள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் கிடைக்க சூரிய கடவுளைப் பிரார்த்திப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகையின் புனிதத்தையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையிலும், சூரிய பகவானின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் பிரார்த்தனை செய்யும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
(Release ID: 2214382)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2214425)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam