பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இளையோர் சக்தி மீதான சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 12 JAN 2026 10:11AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதில் இளையோர் சக்தி மிகவும் வலிமை வாய்ந்த அடித்தமாக உள்ளது என்றும், இந்திய இளைஞர்கள் தங்களது ஆர்வத்தாலும், உத்வேகத்தாலும் ஒவ்வொரு லட்சியத்தையும் அடைய முடியும் என்ற சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

"अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली पातालम्।

वल्मीकश्च सुमेरुः कृतप्रतिज्ञस्य वीरस्य॥"

துணிச்சலும், உறுதியான மனவலிமையையும் கொண்டவர்களுக்கு, முழு பூமியும் தங்களுக்கு சொந்தமான முற்றத்தைப் போலவும், கடல்கள் குளங்களைப் போலவும், வானுயர்ந்த மலைகள் கரையான் புற்றுகளைப் போலவும் இருக்கும் என்பதை இந்த சுபாஷிதம் எடுத்துரைக்கிறது. உறுதியான மனவலிமையைக் கொண்டவர்களுக்கு, இந்த உலகில்  சாத்தியமற்றது என்ற எதுவுமில்லை.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"நாட்டைக் கட்டமைப்பதில் இளையோர் சக்தி வலிமை வாய்ந்தது என்பதில் சுவாமி விவேகானந்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். இந்திய இளைஞர்கள் தங்களது மனஉறுதியாலும், ஆர்வத்தாலும் ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும்.

முற்றம், பலிபீடம், பூமி, கடல், நிலம் மற்றும் பாதாள உலகம் போன்ற அனைத்தும் உன்னதமானவை.

தனது சபதத்தை நிறைவேற்றிய ஒரு வீரனுக்கு சுமேரு மலை, ஒரு எறும்புப் புற்று போன்றது"

***

(Release ID: 2213537)

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2213620) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam