மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு புதிய சாதனையாக இதுவரை 4 கோடிக்கும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன - மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 1:28PM by PIB Chennai
பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் என்ற தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வுக்கு இந்த ஆண்டு 2026 ஜனவரி 8-ம் தேதிவரை 4 கோடிக்கும் அதிகமானோர் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது கடந்த ஆண்டின் 3.56 கோடி என்ற சாதனையை முறியடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வு, வருடாந்திர உரையாடல் என்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் இளைஞர்களுக்கு தேர்வு குறித்து மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் பரிக்ஷா பே சர்ச்சா 2026-ல் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தேர்வு காலம் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளைக் கேட்பதன் மூலம் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2026-க்கான இணையதள பதிவுகள் 2025 டிசம்பர் 1, அன்று மைகவ் (MyGov) தளத்தில் தொடங்கியது. கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த முயற்சி, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள. ஆகியோரை ஒன்றிணைத்து பிரதமருடன் நேரடியாக கலந்துரையாட ஒரு தளமாக மாறியுள்ளது.
பரிக்ஷா பே சர்ச்சா 2026-ல் பங்கேற்க நாளை (11.01.2026) வரை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்: https://innovateindia1.mygov.in/
(Release ID: 2213182)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2213218)
आगंतुक पटल : 17