பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 7:22PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
"இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
(Release ID: 2213020)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2213090)
आगंतुक पटल : 12