உள்துறை அமைச்சகம்
சோமநாதர் ஆலயம் மீண்டெழுந்ததன் ஆயிரமாவது ஆண்டு விழா : நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு
प्रविष्टि तिथि:
08 JAN 2026 7:46PM by PIB Chennai
குஜராத் மாநிலம் சோமநாத்தில் ஜனவரி 8 முதல் 11-ஆம் தேதி வரை கொண்டாடப்படும் "சோமநாதர் சுய மரியாதை விழாவில் இணையுமாறு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சோமநாதர் ஆலயம் முதன்முறையாக தாக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சனாதன கலாச்சாரத்தின் தொடர்ச்சி மற்றும் மீண்டெழும் வலிமையை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த விழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
சோமநாதர் மகாதேவ் கோவில் வெறும் ஜோதிர்லிங்கம் மட்டுமல்ல, அது நமது கலாச்சாரத்தின் அழியாத பாரம்பரியம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பலமுறை சிதைக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு முறையும் சோமநாதர் ஆலயம் முன்பை விடப் பொலிவுடன் எழுந்து வந்துள்ளதாகவும், இது நமது நாகரிகத்தின் வீழாத உறுதியைக் காட்டுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார். இந்த புனிதமான ஆலயத்தின் அறங்காவலராக இருப்பது தனது பாக்கியம் என்று குறிப்பிட்ட அமைச்சர் திரு.அமித் ஷா, நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கௌரவப் பெருவிழாவில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212607®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212607
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212668)
आगंतुक पटल : 10