ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

70-வது அதி விசிஷ்ட் ரயில் சேவா விருதுகள்: 100 ரயில்வே ஊழியர்களுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்

प्रविष्टि तिथि: 08 JAN 2026 6:28PM by PIB Chennai

இந்திய ரயில்வேயில் முன்மாதிரியாகத் திகழும் வகையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 70-வது 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்-2025' விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புது தில்லி துவாரகாவில் உள்ள 'யசோபூமி' சர்வதேச கண்காட்சி மையத்தில் ஜனவரி 9 அன்று நடைபெறும் விழாவில், மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்த உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார். இந்நிகழ்வில் ரயில்வே இணை அமைச்சர்கள் திரு. வி. சோமண்ணா, திரு. ரவ்நீத் சிங், ரயில்வே வாரியத் தலைவர் திரு. சதீஷ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த விருதுகளுக்காக ரயில்வேயின் பல்வேறு துறைகளிலிருந்து சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி உற்பத்தித் திறனை மேம்படுத்திய 17 பேரும், தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்டு ரயில்வே சொத்துக்களையும் பயணிகளையும் பாதுகாத்த 22 பேரும் கௌரவிக்கப்படுகிறார்கள். மேலும், ரயில்வே வருவாயைப் பெருக்கிய 14 பேர், ரயில் இயக்கத்தைச் சிறப்பாகக் கையாண்ட 19 பேர் மற்றும் மிகக் குறுகிய காலத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடித்த 16 அதிகாரிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர்களுடன் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இரண்டு வீரர்களும், பொதுவான பணிகளில் முத்திரை பதித்த 10 பேரும் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

தனிநபர் விருதுகள் மட்டுமின்றி, பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட ரயில்வே மண்டலங்களுக்கு 26 கேடயங்கள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக மகா கும்பமேளா போன்ற பெரிய நிகழ்வுகளின் போது தடையற்ற ரயில் சேவையை உறுதி செய்தவர்கள் மற்றும் 'ஆபரேஷன் சிந்து'வின் போது இக்கட்டான சூழலிலும் பணியாற்றிய அதிகாரிகளின் சேவையை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. பாதுகாப்பான மற்றும் பயணிகளை மையமாகக் கொண்ட ரயில்வே அமைப்பை உருவாக்குவதில் ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212563&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண் 2212563

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2212630) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada