பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் நீடித்த கலாச்சார உணர்வு குறித்த கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JAN 2026 2:08PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவின் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் மாறாத கலாச்சார உணர்வின் அடையாளமாக விளங்குவது சோமநாதர் ஆலயம் என்று திரு மோடி கூறியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் சோமநாதர் முதல் ராமஜென்ம பூமி வரையிலான மாற்றத்தை அது எடுத்துரைக்கிறது. மேலும், நம்பிக்கை மிக்க நாடு என்ற வகையில், தனது கலாச்சார அடையாளத்தில் இந்தியா பெருமிதம் கொள்வதை அது பிரதிபலிக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கட்டுரையைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“சோமநாதர் ஆலயம் இந்தியாவின் மாறாத கலாச்சார உணர்வைக் குறிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் சோமநாதர் ஆலயத்திலிருந்து ராம ஜென்மபூமி வரை ஏற்பட்ட மாற்றம், இந்தியா தனது கலாச்சார அடையாளத்தில் பெருமை கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாறியுள்ளது என்பதற்கான சான்றாகும். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியா இதுகுறித்து தமது கருத்துகளை கட்டுரையில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்...”
***
(Release ID: 2212380)
TV/SMB/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2212565)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam