பிரதமர் அலுவலகம்
ஆக்கப்பூர்வமான, ஆதாரம் அடிப்படையிலான விவாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 2:05PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரை கொள்கைகளை வலுப்படுத்தி, சீர்திருத்தங்களைப் பாதுகாக்கும் வலுவான, ஆதாரம் அடிப்படையிலான விமர்சனங்களை இந்தியா வரவேற்கிறது என்ற பார்வையைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சியில் அவநம்பிக்கைக்கு இடமில்லை என்பதை இது வலியுறுத்துவதுடன், புத்தாண்டுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வலிமையை எடுத்துரைக்கிறது.
இக்கட்டுரையை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்து கூறியிருப்பதாவது:
“கொள்கையை வலுப்படுத்தி சீர்திருத்தங்களைப் பாதுகாக்கும் ஆதாரம் அடிப்படையிலான விமர்சனங்களை இந்தியா வரவேற்கிறது. நமது ஜனநாயக வளர்ச்சியில் அவநம்பிக்கைக்கு இடம் கிடையாது! மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எழுதியுள்ள இக்கட்டுரை இந்தப் புத்தாண்டுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக ஆக்கப்பூர்வமான விவாதத்தைப் பிரதிபலிக்கிறது.
இதை வாசிக்கவும்!”
**
(Release ID: 2212378)
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2212498)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam