தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 08 JAN 2026 1:05PM by PIB Chennai

தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தை  தேர்தல் ஆணையம் புதுதில்லியில் இன்று நடத்தியது. புதுதில்லியில் பாரத் மண்டபத்தில் 2026 ஜனவரி 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாட்டையொட்டி, இக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு குறித்து விளக்கினார்.

அந்த மாநாட்டில் சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்க  உள்ளனர். சர்வதேச அமைப்புகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தேர்தல் துறையில் பயிற்சி பெறும் நிபுணர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 4 ஐஐடி, 6 ஐஐஎம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212356&reg=3&lang=1

***

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2212495) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Punjabi , Telugu