பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் அருவ கலாச்சார பாரம்பரியத்திற்கான யுனெஸ்கோ குழுவின் 20-வது அமர்வு தொடக்கத்தைக் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2025 8:53PM by PIB Chennai

யுனெஸ்கோவின் அருவ கலாச்சார பாரம்பரியக் குழுவின் 20-வது அமர்வு இந்தியாவில் தொடங்குவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் வாழும் மரபுகளைப் பாதுகாத்து பிரபலப்படுத்துவதற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த மன்றம் ஒன்றிணைத்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த முக்கியமான கூட்டத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கூறினார். சமூகங்கள் மற்றும் தலைமுறைகளை இணைக்க கலாச்சாரத்தின் சக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டதாவது:

யுனெஸ்கோவின் அருவ கலாச்சார பாரம்பரியக் குழுவின் 20-வது அமர்வு இந்தியாவில் தொடங்கியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, நமது பகிரப்பட்ட வாழ்க்கை மரபுகளைப் பாதுகாத்து பிரபலப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை இந்த மன்றம் கொண்டுள்ளது. அதுவும் செங்கோட்டையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. சமூகங்களையும் தலைமுறைகளையும் இணைக்க கலாச்சாரத்தின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2200627)

SS/BR/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2212409) வருகையாளர் எண்ணிக்கை : 25