பிரதமர் அலுவலகம்
அமெரிக்க அதிபருடன் பிரதமர் உரையாடினார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 8:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்புடன் உரையாடினார்.
இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் நிலையான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். மேலும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று தலைவர்கள் இருவரும் மீண்டும் உறுதி செய்தனர்.
இந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவு ஒன்றில் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டதாவது:
"அதிபர் திரு டிரம்புடனான கலந்துரையாடல், மிகவும் இணக்கமானதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது. இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்ததுடன், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் பற்றியும் விவாதித்தோம். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.
@realDonaldTrump
@POTUS"
***
(Release ID: 2202624)
AD/RB/KR
(रिलीज़ आईडी: 2212097)
आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam