ஜல்சக்தி அமைச்சகம்
சமூகத்தால் முன்னெடுக்கப்படும் மனிதக் கழிவு மேலாண்மை முன்முயற்சிகளுக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் பாராட்டு
प्रविष्टि तिथि:
07 JAN 2026 11:16AM by PIB Chennai
கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மனிதக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து இம்மாதம் 6-ம் தேதியன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் காணொளி வாயிலான விவாதத்திற்கு, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குஜராத், சிக்கிம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, லடாக் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், தங்களது கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுடன் இணைந்து பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்தும் மனிதக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிலையத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட மனிதக் கழிவுகள் மற்றும் கழிவு நீரைப் பாதுகாப்பாக சேகரித்து அவற்றை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் மறுபயன்பாட்டிற்கான முயற்சிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் தூய்மையை உறுதி செய்வதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அத்துறைக்கான இணையமைச்சர் திரு வி சோமண்ணா, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் திரு அசோக் கே கே மீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற முன்முயற்சிகள் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பங்களிப்பதுடன் வருவாய் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். சவாலான சூழல் கொண்ட பகுதிகளில் தூய்மைப் பராமரிப்பில் நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவிடும் என்று அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211990®=3&lang=1
***
AD/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2212068)
आगंतुक पटल : 16