உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 03 JAN 2026 1:36PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது பெருமை, தேசபக்தி, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான உறுதியின் வெளிப்பாடாக, சிவகங்கையின் ராணியான வேலு நாச்சியார், தனது படை வலிமையால் காலனித்துவ ஆட்சியாளர்களைத் தோற்கடித்தார். ஆங்கிலேயர்களை வீழ்த்த வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தை அவர் தூண்டினார். அவர் எப்போதும் நமக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பார்."

(Release ID: 2211028)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2211138) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam