பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபரின் இல்லம் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
30 DEC 2025 12:53PM by PIB Chennai
ரஷ்ய அதிபரின் இல்லம் தாக்கப்பட்டது குறித்த செய்தியையடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
பகைமையை களைவதற்கும், நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், தற்போதைய ராஜ்ய ரீதியிலான முயற்சிகள்தான் சாத்தியமிக்க வழி என்று திரு. மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இதில் தொடர்புடைய அனைவரும் இம்முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும், அவற்றை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு செயல்களையும் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“ரஷ்ய அதிபரின் இல்லம் தாக்கப்பட்டது குறித்த செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. பகைமையை களைவதற்கும், நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், தற்போதைய ராஜ்ய ரீதியிலான முயற்சிகள்தான் சாத்திமிக்க வழியாகும். இதில் தொடர்புடைய அனைவரும் இம்முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும், அவற்றை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு செயல்களையும் தவிர்க்குமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209713®=3&lang=1
***
TV/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2209768)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam