உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2025’-ஐ தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 7:31PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் 'பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2025'-ஐ தொடங்கி வைத்தார். இரண்டு நாள் மாநாட்டை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏற்பாடு செய்துள்ளது. NIA-ன் புதுப்பிக்கப்பட்ட குற்றக் கையேடுஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் மற்றும் தொலைந்து போன/கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட ஆயுத தரவுத்தளம் ஆகியவற்றையும் அமைச்சர் வெளியிட்டார். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய் மற்றும் திரு பண்டி சஞ்சய் குமார்மத்திய உள்துறைச்  செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள்பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மத்திய நிறுவனங்கள்/துறைகளின் அதிகாரிகள்தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு அமித் ஷாபிரதமர் திரு. நரேந்திர மோடியின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் கீழ்இந்த வருடாந்திர மாநாடு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க ஒரு தளமாக மாறியுள்ளது என்று கூறினார். கடந்த ஆண்டில் நாட்டிலும் உலகிலும் நடந்த அனைத்து பயங்கரவாத சம்பவங்களையும்அவை குறித்து பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களையும் ஆய்வு செய்வதும்அதற்கேற்ப நமது பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கம் என்று திரு ஷா கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பயங்கரவாத சம்பவங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உலகில் பயங்கரவாதத்தின் சூழல் இப்போது மாறி வருவதாகவும்இதைத் தடுக்க நாமும் தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்ணுக்குத் தெரியாத எதிர்கால சவால்களை எதிர்பார்த்து அவற்றைத் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது என்று அமைச்சர் கூறினார். இந்தத் தாக்குதலின் மூலம்பயங்கரவாதிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்துகாஷ்மீரில் தொடங்கியுள்ள புதிய வளர்ச்சி மற்றும் சுற்றுலா சகாப்தத்தை சீர்குலைக்க விரும்பினர். உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில்நமது படைகள் மூன்று பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றுபாகிஸ்தானுக்கு கடுமையான செய்தியை வழங்கியதாக அவர் கூறினார். பயங்கரவாதச் செயலைத் திட்டமிட்டவர்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தண்டிக்கப்பட்டதும்அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு இந்தச் செயலைச் செய்தவர்கள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் கொல்லப்பட்டதும் இதுவே முதல் முறை  என்றும் அவர் கூறினார். இந்திய அரசுஇந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் நாட்டு மக்கள் நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத தலைவர்களுக்கு வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் காவல்துறைக்கு பொதுவான பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) கட்டமைமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்திய அமைச்சர்அனைத்து மாநிலங்களின்  காவல்துறை தலைமை இயக்குநர்களும் இதை விரைவில் செயல்படுத்த வேண்டும்என்று கேட்டுக் கொண்டார். பயங்கரவாதிகளைத் தண்டிப்பதில் பொதுவான ஏடிஎஸ் கட்டமைப்பும் சீரான செயல்பாட்டுத் தன்மையும் நமக்கு ஒரு நன்மையை அளிக்கின்றன என்று அவர் கூறினார். சீரான செயல்பாட்டுத் தன்மையை நாம் அடையாவிட்டால்அச்சுறுத்தல்களை துல்லியமாக மதிப்பிடவோஉளவுத்துறை பகிர்வை முறையாகப் பயன்படுத்தவோஒருங்கிணைந்த எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாது. விசாரணையிலிருந்து வழக்குத் தொடருதல் மற்றும் எதிர் நடவடிக்கை வரை சீரான தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று திரு ஷா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208950&reg=3&lang=1

***

AD/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2209030) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada