உள்துறை அமைச்சகம்
இந்திய அரசியலமைப்பை சந்தாலி மொழியில் வெளியிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்காக பிரதமருக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 4:40PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சந்தாலி மொழியில் வெளியிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர், இந்த நடவடிக்கை, இந்திய மொழிகளை கௌரவிப்பதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறினார். சந்தாலி மொழியில் நமது அரசியலமைப்புச் சட்டம் வெளியிடப்படுவது, சந்தாலி சமூகத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்று அவர் கூறினார். ஒல் சிக்கி எழுத்துமுறையில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு, நமது அரசியல் சாசனத்தின் லட்சியங்களையும் மதிப்புகளையும் பழங்குடி சமூகத்திற்கு இன்னும் தெளிவாகக் கொண்டு சென்று நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவை நிறைவேற்றும் என்று திரு ஷா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208859®=3&lang=1
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2209020)
आगंतुक पटल : 19