ரெயில்வே அமைச்சகம்
2030-ஆம் ஆண்டுக்குள் தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட 48 முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் திறனை இருமடங்காக அதிகரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
26 DEC 2025 4:48PM by PIB Chennai
பயணத் தேவையில் ஏற்பட்டுள்ள விரைவான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்கும் திறனை தற்போதைய நிலையிலிருந்து இருமடங்காக அதிகரிக்க வேண்டியது அவசியம். வரும் ஆண்டுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குள் புறப்படும் ரயில்களின் திறனை இருமடங்காக அதிகரிக்கும் பணிகளில் பின்வரும் நடவடிக்கைகள் அடங்கும்:
தற்போதைய முனையங்களில் கூடுதல் நடைமேடைகள், நிறுத்துமிடப் பாதைகள், பராமரிப்புப் பாதைகள் மற்றும் போதுமான ரயில் நகர்த்தும் வசதிகளுடன் மேம்படுத்துதல்.
நகர்ப்புறப் பகுதிக்கு உள்ளேயும் சுற்றியும் புதிய முனையங்களைக் கண்டறிந்து உருவாக்குதல்.
மேற்கூறிய பணிகள் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும், இரு பிரிவுகளின் தனித்துவமான தேவைகளையும் கருத்தில் கொண்டு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208869®=3&lang=1
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2209017)
आगंतुक पटल : 23