பிரதமர் அலுவலகம்
எல்விஎம்3 - எம்6 ராக்கெட் மூலம் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 DEC 2025 10:04AM by PIB Chennai
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் எடை அதிகம் கொண்ட கனமான செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம், அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்காக விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனையைக் குறிக்கிறது என்றும், இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.
"எல்விஎம்3 நம்பகமான கனரக ராக்கெட் ஏவுதல் திறனை வெளிப்படுத்தியதன் மூலம், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளத்தை நாம் வலுப்படுத்தி, வணிக ஏவுதல் சேவைகளை விரிவுபடுத்துவதுடன், உலகளாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்," என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் எல்விஎம்3-எம்6 மூலம் அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது, இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனையைக் குறிக்கிறது.
இது இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.
இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. நமது கடினமாக உழைக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
விண்வெளி ஆராய்ச்சி உலகில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது!"
"இந்திய இளைஞர்களால் உந்தப்பட்டு, நமது விண்வெளித் திட்டம் மேலும் மேம்பட்டதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது.
எல்விஎம்-3 நம்பகமான கனரக ஏவுதல் திறனை வெளிப்படுத்தியதன் மூலம், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளத்தை நாம் வலுப்படுத்துகிறோம், வணிக ஏவுதல் சேவைகளை விரிவுபடுத்துகிறோம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்.
இந்த அதிகரித்த திறனும், தற்சார்புக்குக் கிடைத்த ஊக்கமும் எதிர்கால தலைமுறைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன".
***
Release ID: 2207983
TV/PKV/KR
(रिलीज़ आईडी: 2208101)
आगंतुक पटल : 22