பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 DEC 2025 3:22PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது;
“அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”
***
(Release ID:2206959)
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2206986)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam