பிரதமர் அலுவலகம்
பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
19 DEC 2025 2:29PM by PIB Chennai
பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21 அன்று காலை 9.45 மணி அளவில், குவஹாத்தியின் போராகானில் உள்ள ஸ்வாஹித் சமாரக் க்ஷேத்ராவில் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துவார். இதன் பின் திப்ருகரில் உள்ள நாம்ரூப் செல்லும் அவர், அங்கு அமோனியா – யூரியா தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவார். இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்போரிடையே அவர் உரையாற்றுவார்.
இந்த உரத்தொழிற்சாலையின் முதலீடு ரூ.10,600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அசாம் மற்றும் அண்டை மாநிலங்களின் உரத்தேவையைப் பூர்த்தி செய்வதோடு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். கணிசமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206488®=3&lang=1
********
SS/SMB/KPG/SE
(रिलीज़ आईडी: 2206717)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada