பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காணொலி வாயிலான ஜி-20 உச்சிமாநாட்டில் பிரதமர் வெளியிட்ட நிறைவு செய்தியின் தமிழாக்கம் 

प्रविष्टि तिथि: 22 NOV 2023 9:38PM by PIB Chennai

மாண்புமிகு பெருமக்களே,

உங்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் வெளிப்படையாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுதில்லி பிரகடனத்தில், பல துறைகளில் கூட்டு உறுதிப்பாடுகளை நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

இன்று, அந்த உறுதிமொழிகளை முன்னெடுத்துச் செல்ல மீண்டும் ஒருமுறை நாம் தீர்மானித்துள்ளோம்.

வளர்ச்சி சார்ந்த திட்டங்களுடன், உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் அவற்றின் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த கருத்துகளையும் நாம் பரிமாறிக் கொண்டுள்ளோம்.

மேற்கு ஆசியாவின் மோசமான நிலைமை குறித்த உங்கள் கண்ணோட்டங்களைக் கேட்ட பிறகு, ஜி-20க்குள் பல விஷயங்களில் பரந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று என்னால் கூற முடியும்.

முதலில், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் அனைவரும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

இரண்டாவதாக, அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்றாவதாக, மனிதாபிமான உதவிகள் முடிந்தவரை விரைவாகவும், திறம்படவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும்.

நான்காவதாக, மனிதாபிமான போர் இடைநிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளின் விடுதலை தொடர்பான செய்திகளில் ஒருமித்த கருத்தை வரவேற்கிறோம்.

ஐந்தாவது, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு அரசுகளின்  கட்டமைப்பு மூலம் நிரந்தர தீர்வு தேவை.

ஆறாவது, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது அவசியம்.

ஏழாவது, புவிசார் அரசியல் பதட்டங்களைத் ஒரே தீர்வு பாதை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே.

இது சம்பந்தமாக, ஜி-20 அமைப்பு, அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது.

மாண்புமிகு பெருமக்களே,

ஜி-20 தலைமைத்துவத்திற்காக  எனது அன்புக்குரிய நண்பரும், பிரேசில் அதிபருமான லூலாவிற்கு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரேசிலின் தலைமையின் கீழ், மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன்.

வசுதைவ குடும்பகம் என்ற உணர்வால் வழிநடத்தப்பட்டு, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு வழி வகுக்க ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.

வளர்ந்து வரும் நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய  தொடர்ந்து பாடுபடுவோம்.

உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு  முன்னுரிமை அளிப்போம்.

பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை  நிச்சயமாக முன்னெடுப்போம்.

பருவநிலை நடவடிக்கைகளுடன், நியாயமான, அணுகக்கூடிய மற்றும் கட்டுப்படியான பருவநிலை நிதியையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

கடன் மறுசீரமைப்பில் வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெண்கள் தலைமையிலான மேம்பாடு, திறன்சார் இடம் பெயர்வு வழிமுறைகள் நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு  முக்கியத்துவம் கொடுப்போம்.

ட்ரொய்காவின் உறுப்பினராக, நமது பகிரப்பட்ட உறுதிப்பாடுகளை முன்னேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பிரேசிலின் ஜி-20 தலைமைத்துவத்தின் வெற்றிக்கு இந்தியாவின் முழுமையான ஆதரவையும் நான் உறுதியளிக்கிறேன்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் வெற்றிக்காக உங்கள் ஒத்துழைப்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***


(Release ID: 1978953)

SS/BR/EA


(रिलीज़ आईडी: 2206534) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Odia , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam