தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
விரிவான கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் வருவாய் உருவாக்கத்திற்கான ஒருங்கிணைப்பு கட்டமைப்பை பிரசார் பாரதியின் முன்முயற்சிகள்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 3:37PM by PIB Chennai
பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் வகையில், பிரசார் பாரதி 2025 - ம் ஆண்டிற்கான நிகழ்ச்சிகள் குறித்த வரைவு ஒருங்கிணைப்புக் கொள்கையை தயாரித்துள்ளது. இந்த வரைவுக் கொள்கை, பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக பிரசார் பாரதியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊடகச் சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு முக்கிய தரப்பினரிடமும் தொழில்முறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஓடிடி தளங்கள், நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், வானொலி வலையமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஐபிடிவி இயக்குநர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள், தேசிய, மண்டல நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகள் (அரசு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை) ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டுவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரசார் பாரதியின் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் டிஜிட்டல் வடிவிலான நிகழ்ச்சிகளையும் இந்தக் கொள்கை கவனத்தில் கொண்டுள்ளது.
மேலும், பிரசார் பாரதிக்குச் சொந்தமான, ஒப்பந்த அடிப்படையில் அல்லது இணைந்து தயாரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற மற்றும் இதர நிகழ்ச்சிகளின் மூலம் வருவாய் ஈட்டவும் இந்த வரைவுக் கொள்கை வகை செய்கிறது.
இந்த வரைவு ஒருங்கிணைப்புக் கொள்கை, பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கும், உலகளவில் இந்தியாவின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச தளங்களுடன் உத்திசார் ஒத்துழைப்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நிலையான கட்டணம், வருவாய் பகிர்வு, வருவாய் பகிர்வுடன் கூடிய குறைந்தபட்ச உத்தரவாதம் போன்ற நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய உரிம மாதிரிகளை வழங்குகிறது.
மக்களவையில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வ கணபதி டி.எம். எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205206®=3&lang=1
***
(Release ID:2205206)
AD/SV/SE
(रिलीज़ आईडी: 2205516)
आगंतुक पटल : 9