தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகள் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின் கீழ் மும்முனை நிறுவன அமைப்பு செயல்முறைகள் வாயிலாக சான்றளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்

प्रविष्टि तिथि: 17 DEC 2025 2:51PM by PIB Chennai

மத்திய திரைப்பட சான்றளிக்கும் வாரியம் (சிபிஎப்சி) என்பது மக்களின் பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தணிக்கை செய்து சான்றளிப்பதற்காக, 1952 - ம் ஆண்டு திரைப்படச்  சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், 2021 - ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகளின் பகுதி III - ன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இந்த நெறிமுறைக் குறியீடு, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை வெளியிடுவதை ஓடிடி தளங்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அவை விதிகளில் உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வயது அடிப்படையில் வகைப்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இந்த விதிமுறைகள், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பான விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் குறைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கும் ஒரு மும்முனை நிறுவன அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

நிலை I: வெளியீட்டாளர்களால் கடைபிடிக்கப்படும் சுய-ஒழுங்குமுறை

நிலை II: வெளியீட்டாளர்களின் சுய-ஒழுங்குமுறை அமைப்புகளால் கண்காணிக்கப்படும் சுய-ஒழுங்குமுறை

நிலை III: மத்திய அரசின் மேற்பார்வை அமைப்பு

 

மக்களவையில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இதனைத் தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205165&reg=3&lang=1

 

***

(Release ID:2205165&)

AD/SV/SE


(रिलीज़ आईडी: 2205482) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Malayalam , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Telugu , Kannada