உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம் டிரிப்யூன் குழுமத்தின் ஆசிரியரும் மேலாண்மை இயக்குநருமான பி ஜி பருவா மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2025 12:24PM by PIB Chennai

அசாம் டிரிப்யூன் குழுமத்தின் ஆசிரியரும் மேலாண்மை இயக்குநருமான பி ஜி பருவா மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான  திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், திரு. அமித் ஷா, “அசாம் டிரிப்யூன் குழுமத்தின் ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான பி ஜி பருவா மறைவால் வேதனை அடைந்தேன். செய்திகள் பொது மக்களைச் சென்றடைவதையும், பத்திரிகை மூலம் அசாமின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான அவரது முயற்சிகள் தொடர்ந்து மக்களை ஊக்குவிக்கும். அவரது குடும்ப உறுப்பினர்கள், அசாம் டிரிப்யூன் குழுமம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த  இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார் .

***

(Release ID 2203931)

SS/PKV/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2204058) வருகையாளர் எண்ணிக்கை : 42