உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தையொட்டி, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 11:25AM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, மரியாதை செலுத்தியுள்ள மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா,  தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாகவும்  என்றும் வலிமையான இந்தியாவின் சிற்பியாகவும் படேல் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, ஏராளமான, பாதகமான சூழல்கள் ஏற்பட்ட போதிலும், சர்தார் படேல், பிளவுபட்டிருந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்றும் அது வலுவான நாட்டிற்கான வலிமையான தளத்தை  அமைத்தது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் படேல், தமது வாழ்நாளில் தாய் திருநாட்டின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்நாட்டில் ஸ்திரதன்மையையும் அமைதியையும் ஏற்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். கூட்டுறவு இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு உத்வேகம் அளித்த சர்தார் படேல், மகளிர் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மூலம் தற்சார்பு இந்தியாவிற்கு அடிக்கல் நாட்டினார் என்று அவர் கூறினார்.  நாட்டை முதன்மை நாடாக திகழச் செய்வதற்கான  வழிவகைகளில் தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203892&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2204010) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali-TR , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam