குடியரசுத் தலைவர் செயலகம்
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது
प्रविष्टि तिथि:
12 DEC 2025 1:58PM by PIB Chennai
மணிப்பூரில் பழங்குடியின மக்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் தேசிய முன்னுரிமையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் உள்ள சேனாபதி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் இன்று (12.12.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அனைவரையும் உள்ளடக்கிய மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் தலைவர்கள் சமூக அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்தாலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிளிலும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மை ஆண்டுகளில் மலை மாவட்டங்கள் நிறைந்த மணிப்பூர் மாநிலம் பயனடையும் வகையில், சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள், சுகாதாரம், கல்வி, குடிநீர், மின் விநியோகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் வந்தன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202871®=3&lang=1
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2203275)
आगंतुक पटल : 10